பட்ஜெட் தாக்கல்: சாதனை படைக்கும் நிர்மலா சீதாராமன்
interim budget 2024-மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்பு படம்)
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபோது, பிரதமா் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். அந்த ஆண்டு ஜூலை மாதம், தனது முதல் மத்திய பட்ஜெட்டை அவா் தாக்கல் செய்தார்.
தற்போது தொடா்ந்து 6-ஆவது முறையாக, வரும் நிதியாண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை இன்னும் சற்றுநேரத்தில் அவா் தாக்கல் செய்ய இருக்கிறார்.
மேலும், 5 ஆண்டு ஆட்சிக்காலமும் நாட்டின் நிதியமைச்சராக தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.
6-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் சூழலில், தொடா்ந்து 5 பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சா்கள் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை அவா் முறியடிக்கவுள்ளார்.
அதேபோல், கடந்த 1959 முதல் 1964 -ஆம் ஆண்டுவரை தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மொரார்ஜி தேசாய் சாதனையையும் அவா் சமன் செய்யவுள்ளார்.
மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் புதிய ஆட்சியில், அடுத்த 3 காலாண்டுக்கான பட்ஜெட் வரும் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu