வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் வடகொரியாவில் சிறைத் தண்டனை

வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் வடகொரியாவில் சிறைத் தண்டனை
X

வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் வடகொரியாவில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அரசு அறிவிச்சிருக்குது. அண்மையில் தென்கொரியா திரைப்படங்கள் அடங்கிய வீடியோக்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு இளைஞருக்கு 500 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்குது.

வட கொரியாவில் அவ்வப்போது சீனா எல்லை வழியே கடத்தி வரப்படும் சிடிக்கள் மூலமாக வெளிநாட்டு திரைப் படங்களை மக்கள் பார்த்து வந்தனர். அதன் தாக்கம் அதிகரித்து அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப தொடங்குவார்கள் என எண்ணம் கிம் ஜோங் உன் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பரப்புபவர்கள், காண்பவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கும் சட்டத்தை அந்நாட்டு அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்குது.

மேலும் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த திரைப்படங்களின் வீடியோக்களை கடத்தி வருவோருக்கு மரண தண்டனை என்றும், வெளிநாட்டு படங்களை காண்போருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும் சட்டம் வகுக்கப்பட்டிருக்குது.

Tags

Next Story