இரண்டு வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்

இரண்டு வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்
X

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் வாராக்கடன் நிலுவை தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் முடிவு செய்யப்பட்டது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்தார். இதற்கு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வருகிறது. மேலும் வங்கி ஊழியர்கள் இதனை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஆகிய இரு வங்கி பங்குகளை தனியார்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து நிதி ஆயோக் மத்திய அரசிற்கு பரிந்துரை ஒன்றை செய்துள்ளது. அதன்படி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர் சீஸ் பேங்க் ஆகிய இரு வங்கிகளும் முதன்மை பட்டியலில் இருப்பதாக தெரிவித்தது.

இந்த இரு வங்கிகளின் முதலீடு மதிப்பு சுமார் ரூ.44 ஆயிரம் கோடி என்றும் அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சந்தை முதலீடு மட்டும் சுமார் ரூ.31,646 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு வங்கிகளை தொடர்ந்து மகாராஷ்டிரா வங்கியும் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் இரண்டாம் அலையின் காரணமாக தான் வங்கிகளை தனியாரிடம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!