தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு -தமிழ்நாடு வங்கியாளர் குழுமம் அறிவிப்பு

தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு -தமிழ்நாடு வங்கியாளர் குழுமம் அறிவிப்பு
X

வங்கி வேலை நேரம் குறைப்பு - தமிழ்நாடு வங்கியாளா்கள் குழுமம்

தமிழகத்தில் இன்று முதல் வங்கி சேவை நேரம் குறைப்பு – தமிழ்நாடு வங்கியாளர் குழுமம் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் இன்று முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தற்போது வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்று வங்கியாளர் குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (ஜூன் 7) காலை 6 மணி முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அடங்கிய ஊரடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாத 10ம் தேதி முதல் விதிக்கப்பட்ட்ட ஊரடங்கு காரணமாக வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களும் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு வங்கியாளர் குழுமம் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு ஊரடங்கை சில தளர்வுகளுடன் வருகின்ற 14ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் வங்கிகளில் வேலை நேரமும் வருகிற 13ம் தேதி வரை குறைக்கப்படுகிறது. அதன்படி அனைத்து வங்கி கிளைகளும் காலை 10 மணி வரை மாலை 4 மணி வரை செய்லபடும் என்றும் வங்கி பரிவர்த்தனைகள் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வங்கி நிர்வாகம் வழக்கம் போல் மாலை 5 மணி வரை செயல்படும். அதேபோல் வங்கி கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டுமே சுழற்சி முறையில் செயல்பட வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை சேவைகளான என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் ஆகியவற்றினை வழங்க வேண்டும் என்றும் அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் செலுத்தும் இயந்திரம் போன்றவை முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!