இயற்பியல் விஞ்ஞானி அல்லாடி ராமகிருஷ்ணன் காலமான தினம் இன்று!😢

இயற்பியல் விஞ்ஞானி அல்லாடி ராமகிருஷ்ணன் காலமான தினம் இன்று!😢
X

இயற்பியல் விஞ்ஞானி அல்லாடி ராமகிருஷ்ணன்

சென்னையில், பிரபல வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் மகனாக 1923 ஆக., 9ல் பிறந்தவர், ராமகிருஷ்ணன். சென்னை பிரசிடென்சி கல்லுாரியில், இயற்பியலில் பி.எஸ்சி., பட்டம் பெற்றார்.அணு விஞ்ஞானி ஹோமி பாபாவுடன் இணைந்து, 'டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்' நிறுவனத்தில் பணியாற்றினார்.

அதை தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலையில் பணியாற்றினார்.இந்தியா திரும்பியவர், அப்போதைய பிரதமர் நேருவின் ஆதரவோடு சென்னையில் கணித அறிவியல் நிறுவனத்தை துவக்கி, அதன் இயக்குனராக இருந்தார்.துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களிப்பு ஆற்றினார். 200க்கும் மேற்பட்ட அறிவியல் விரிவுரைகளை அளித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் கெய்னஸ்வில்லில், 2008 ஜூன் 7ல், தன் 85வது வயதில் இயற்கை எய்தினார்.இயற்பியல் விஞ்ஞானி அல்லாடி ராமகிருஷ்ணன் காலமான தினம் இன்று!😢

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!