இன்று முதல் மதுபான கடைகள் திறக்க அனுமதி – வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது .
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு இன்று (ஜூன் 7 ) திங்கள் முதல் மதுபான கடைகள் ஒற்றைப்படை (Odd-Even) அடிப்படையில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உணவகங்கள் மற்றும் பார்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அவை வணிக வளாகங்களில் இருந்தாலும் திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பின் படி, ஜிம்னாசியம், ஸ்பாக்கள், பார்லர்கள் மற்றும் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை. இன்று-ஜூன் 7 முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் ஒற்றைப்படை (Odd-Even) அடிப்படையில் திறக்கப்படும். டெல்லி மெட்ரோ ரயில் 50 சதவீத பயணிகளுடன் செயல்படும். தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
டெல்லியில் இதுவரை 1,428,863 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 24,557 இறப்புகளும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,731 ஆக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1000க்கும் கீழ் குறைந்து உள்ளதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஜூன் 7) முதல் டெல்லியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அதனுடன் உணவகங்கள், பார்கள் போன்றவை திறக்க விதிக்கப்பட்ட தடை தொடரும். இவை மால்களில் இருந்தாலும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu