திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கள்ளச்சாராயம் பறிமுதல் - 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கள்ளச்சாராயம் பறிமுதல் - 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
X

திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. அதனையடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து அதனை தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து திருத்தணி அடுத்த மத்தூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு பேரை மடக்கி சோதனை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த கோணி பையை சோதனை செய்தபோது அதில் 10 லிட்டர் கள்ளச்சாராயம் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் தெக்களூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மற்றும் குணசேகரன் என்பதும் ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயத்தை வாங்கிவந்து தமிழகத்தில் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Next Story
வாரம் 2 முறை.. வயிற்றை சுத்தம் செய்ய இந்த இலைய சாப்டுங்க!..