இராணுவத்தில் பெண்கள்
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள், பல்வேறு நிலைகளில், நாட்டுக்கு சேவை செய்து வருகின்றனர். ராணுவத்தில் சேர இளம் பெண்களிடம் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ராணுவத்தில் பெண்கள் உயர் பதவிகளில் சாதனை செய்து வருவதே, ராணுவத்தில் இளம் பெண்கள் சேர்வதற்கான ஆர்வத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.
தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கை இடையே ஒரு சமநிலையை பராமரிக்க பெண் அதிகாரிகள் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றனர். பெண்களுக்கு அதிகாரமளித்தல் அதற்கு சரியான உதாரணம். அவர்கள் படைகளில் சேர விரும்பும் உத்வேகமே ஒரு ஆதாரமாக உள்ளது.
இராணுவத்தின் முக்கிய அந்தஸ்தில் உள்ள பல பெண் அதிகாரிகள் எதிர்காலத்தில் நிச்சயமாக போரிடும் பதவிகளிலும் பணியமர்த்தப்படுவார்கள் என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். ராணுவ கட்டமைப்பு நடவடிக்கைகளில் பாலினபாகுபாடு இல்லை என்றே கூற வேண்டும். சரித்திரம் படைக்க இருக்கிறது நமது இந்திய ராணுவம். பாரதி கண்ட கனவு நிஜமாகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu