ஜனாதிபதியுடன்,மத்தியநிதியமைச்சர் சந்திப்பு

ஜனாதிபதியுடன்,மத்தியநிதியமைச்சர் சந்திப்பு

டிஜிட்டல் வடிவிலான பட்ஜெட்டுடன் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

2021- 2022 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (1 ம் தேதி) காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் . இந்த நிலையில் டிஜிட்டல் வடிவிலான பட்ஜெட் அடங்கிய பெட்டகத்துடன் நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்தை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பட்ஜெட் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள 'யூனியன் பட்ஜெட்' (Union Budget) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story