வாகன ஓட்டுனர் உரிமம் பெற புது நடைமுறை: இனி சோதனை கிடையாது- மத்திய அரசு!
X
By - Magizh Venthan,Repoter |11 Jun 2021 6:49 PM IST
வாகன ஓட்டுனர் உரிமம் பெற இனி சோதனை கிடையாது. புதிய நடைமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற, ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடைபெறும் ஓட்டுனர் சோதனையில் பங்கேற்று சரியாக இயக்கினால் மட்டுமே பெற முடியும். ஆனால் இதுபோன்ற சோதனை இல்லாமலேயே உரிமம் வழங்கும் நடைமுறை வர இருக்கிறது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்கும் அவசியம் கிடையாது. இந்த புதிய நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu