ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன பசு

நெல்லூர் பசு
ஆந்திர மாநிலம் நெல்லூர் இன பசுகள் பிரேசில் நாட்டில் முக்கியமான மாடு இனங்களில் ஒன்றாகும். அவை பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகளின் இறைச்சி குறைந்த கொழுப்பு தன்மை காரணமாக பல நாடுகளில் அதிக தேவை உள்ளது.
தற்போது பிரேசில் நாட்டில் 16.70 கோடி நெல்லூர் இன மாடுகள் உள்ளன. பிரேசிலின் மொத்த பசுக்களின் எண்ணிக்கையில் அவை 80 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இனத்தைச் சேர்ந்த சிறந்த காளைகளின் விந்தணுவும் அரை மில்லி லிட்டர் ரூ.4 லட்சம் மதிப்புடையது. நெல்லூர் இன காளைகளின் விந்துக்கள் மூலம் அதிக அளவில் செயற்கை முறை கருத்தரித்தல் செய்யப்படுவதால் அவற்றின் விலை அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மாடுகள் அதிக வெப்பநிலையைத் தாங்கும் மற்றும் அடர்த்தியான வெள்ளை நிறத்தைக் கொண்டிருக்கும். தடிமனான தோல் இருப்பதால் ரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகள் அவற்றை அண்ட முடியாது.
அவற்றின் பால் சுரப்பிகள் ஐரோப்பிய மாடுகளை விட 2 மடங்கு பெரியதாகவும், பால் சுரப்பது 30 சதவீதம் அதிகமாகவும் உள்ளது. அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடவை என்பதால் தொற்றுநோய்களைத் திறம்பட தாங்கும்.
பிரேசிலில் உயர் மரபணு கொண்ட நெல்லூர் இன பசு ஏலம் விடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஒரு பசு ரூ.6.50 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஆண்டு உயர் ரக பசு ஒன்று ரூ.35.30 கோடிக்கு ஏலம் போனது. இதுவே உலகின் விலை உயர்ந்த பசுவாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu