நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தேவை இப்போது தெளிவாகிறது: சசி தரூர்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தேவை இப்போது தெளிவாகிறது: சசி தரூர்

காங்கிரஸ் எம்பி சசி தரூர் 

நிறைய மசோதாக்கள் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதால், இது ஏன் அவசியம் என்று நாங்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தோம் என்று சசி தரூர் கூறினார்

அரசு கூறும் மசோதாக்கள் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதால், இந்த சிறப்பு கூட்டத்தொடரை ஏன் அழைத்தார்கள் என்பதில் அனைவரும் சற்று குழப்பத்தில் இருந்தோம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கூறியுள்ளார்

இது குறித்து சசி தரூர் கூறியதாவது: சிறப்புக் கூட்டத்தொடர் ஏன் அவசியம் என்று நாங்கள் அனைவரும் குழப்பமடைந்தோம், ஏனெனில் பல வழிகளில், அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பல மசோதாக்கள் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு கட்டடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்திற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் ஒரு சிறப்பான தருணத்தை உருவாக்க விரும்பியது இப்போது தெளிவாகிறது. சிறப்பான முறையில் செய்ய முயற்சித்துள்ளனர். இப்போது நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது என கூறினார்.

மேலும், பழைய கட்டடத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் கடைசி நாளில் பேசிய காங்கிரஸ் எம்பி தரூர், வரலாறு மற்றும் நினைவுகள் நிறைந்த ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறுவது எப்போதும் உணர்ச்சிகரமான தருணம் என்று கூறினார்.

பிரதமர் கூறியது போல் இந்த கட்டிடம் நினைவுகள் நிறைந்தது, இது வரலாறு நிறைந்தது. அது ஒரு சோகமான தருணமாக இருக்கும். புதிய கட்டடத்தில் சிறந்த வசதிகளும், புதிய தொழில்நுட்பமும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வசதியும் இருக்கும் என நம்புவோம். இருப்பினும், வரலாறு மற்றும் நினைவுகள் நிறைந்த ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறுவது எப்போதுமே உணர்ச்சிகரமான தருணம், ”என்று மேலும் கூறினார்.

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு அமர்வு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் அமர்வு நடைபெற்று வருகிறது, சிறப்பு அமர்வின் இரண்டாம் நாளான செவ்வாய்கிழமை புதிய கட்டிடத்திற்கு எம்.பி.க்கள் செல்லவுள்ளனர்.

முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உழைக்க உறுதிமொழி அளிக்குமாறு எம்.பி.க்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story