பிரதமர் மோடியுடன் திரௌபதி முர்மு சந்திப்பு

பிரதமர் மோடியுடன் திரௌபதி முர்மு சந்திப்பு
X
பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக போட்டியிடும் திரௌபதி முர்மு, பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார்

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும், பாஜக கூட்டணி சார்பில், ஒடிசாவை சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவும் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் முதல் பழங்குடியினப் பெண் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அரசியல் வாழ்க்கையை கவுன்சிலராக தொடங்கிய முர்மு, ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநரானார். தற்போது குடியரசு தலைவர் வேட்பாளராக களம் காண்கிறார்.

இந்நிலையில், நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக டெல்லி வந்துள்ள திரௌபதி முர்மு பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதை அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும், அடிப்படை பிரச்சனைக்கான புரிதல் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான திரௌபதியின் பார்வை சிறப்பானது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil