மதுரைவீரன் ஐயனாரை போன்றவர் பிரதமர் மோடி! அதிமுக எம்பி 'ஐஸ்'

மதுரைவீரன் ஐயனாரை போன்றவர் பிரதமர் மோடி! அதிமுக எம்பி ஐஸ்
X

நவநீதகிருஷ்ணன் எம்.பி.

நாடாளுமன்ற மாநிலங்களவை பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மதுரைவீரன் ஐயனார் போன்று மக்களை காப்பாற்றி வருவதாக புகழாரம் சூட்டினார்.

தற்போது, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல், இன்று காலை மாநிலங்களவை கூடியதும், பிரச்சனைகளை கிளப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். 12 எம்பிக்களை இடைநீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால், 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை, மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததது. இதனால், நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, அமளிக்கு மத்தியில், அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசினார். அவர் பேசும் போது, அவரை பேசவிடாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் தடுத்தனர். எனினும் தொடர்ந்து பேசிய நவநீதகிருஷ்ணன், "என்னை பேசாமல் தடுப்பது ஜனநாயகமாக இருக்காது என்றார். மேலும் அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மதுரைவீரன் ஐயனார் போன்று மக்களை காக்கிறார்" என்றார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி