தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினக் கொண்டாட்டம்: குடியரசுத் தலைவர் பங்கேற்பு

தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினக் கொண்டாட்டம்: குடியரசுத் தலைவர் பங்கேற்பு
X
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.

எரிசக்தியை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், எரிசக்தி சிக்கனத்தில் நாட்டின் சாதனைகளை வெளிப்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் டிசம்பர் 14-ம் தேதி தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் டிசம்பர் 14, அன்று நடைபெறும் தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் 2023 விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவதுடன், தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2023, தேசிய எரிசக்தி திறன் கண்டுபிடிப்பு விருதுகள் 2023 மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான தேசிய ஓவியப் போட்டி 2023 ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களையும் கௌரவிக்கவுள்ளார்.

தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் மற்றும் விருதுகள் மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி செயல்திறன் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் மத்திய மின்சக்தி புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங், மத்திய மின்சாரம், கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு. கிருஷ்ண பால், மின் அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள்

எரிசக்தி சிக்கனம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, எரிசக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை வழங்குவதன் மூலம் எரிசக்தி நுகர்வைக் குறைப்பதில் தொழில்துறை அலகுகள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் முயற்சிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.

இதற்காக நவம்பர் 9 வரை மொத்தம் 516 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 20 முதல் பரிசுகள், 16 இரண்டாம் பரிசுகள், 27 தகுதிச் சான்றிதழ்கள் என மொத்தம் 63 பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!