மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு இன்று துவக்கம்

மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு இன்று துவக்கம்
X
மாநில மற்றும் யூனியன் பிரதேச மின் துறை அமைச்சர்கள் மாநாட்டை மத்திய அமைச்சர் இன்று துவக்கி வைத்தார்.

மின் துறையில் உள்ள சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் தேசிய மாநாட்டை மத்திய அரசு நடத்துகிறது.

புதுதில்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாட்டை மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று தொடங்கி வைத்தார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அமைச்சர் ஆர்.கே. சிங், மின் துறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வராமல் இருந்திருந்தால் இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மாறியிருக்காது என்று கூறினார். பொருளாதார வளர்ச்சி என்பது மின் துறையை சார்ந்துள்ளது என்றும் இத்துறை நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை உந்து சக்தியாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வேகமாக வளர்ந்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வது இரண்டாவது சவாலாகும் என்று கூறிய அவர் ஆனால் தேவையை பூர்த்தி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் மின் தேவை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இது நமது பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 2017-18-ம் ஆண்டில் உச்ச மின்தேவை 1.9 லட்சம் மெகாவாட்டாக இருந்த நிலையில், அண்மையில் 2.41 லட்சம் மெகாவாட் என்ற அளவை எட்டியதாகவும் இந்த உச்ச தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் மின் தேவை தொடர்பான சவாலை எதிர்கொள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் முழு திறனுடன் இயக்கப்பட வேண்டும் என்று ஆர்.கே. சிங் கூறினார். சில மாநிலங்கள் தங்கள் மின் நிலையங்களை உச்ச திறனில் இயக்குவதில்லை என்றும் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தைக் கேட்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். இது தவிர, திறனையும் அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசிய மின்துறைச் செயலாளர் பங்கஜ் அகர்வால், நடப்பு நிதியாண்டில் சுமார் 10,000 மெகாவாட் அனல் மின் திறனையும், 21,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனையும் அதிகரிக்க நாடு தயாராகி வருவதாக தெரிவித்தார். 2031-32-ம் ஆண்டுக்குள் 900 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை எட்ட உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவாக மின்துறைச் செயலாளர் கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவப்பட்ட திறன் கணிசமாக அதிகரித்துள்ளது என்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் செயலாளர் பூபிந்தர் சிங் பல்லா கூறினார். 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி திறனை நிறுவ மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil