ஆட்டோவில் மர்மப்பொருள் வெடிப்பு: 2 பேர் கவலைக்கிடம்

ஆட்டோவில் மர்மப்பொருள் வெடிப்பு: 2 பேர் கவலைக்கிடம்
X

மர்ம பொருள் வெடித்த ஆட்டோ.

மங்களூருவில் ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் மர்மப்பொருள் வெடித்ததால் இருவர் படுகாயங்களுடன் கவலைக்கிடமாக உள்ளனர்.

மங்களூருவில் ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் மர்மப்பொருள் வெடித்ததால் இருவர் படுகாயங்களுடன் கவலைக்கிடமாக உள்ளனர்.

கர்நாடக மாநிலம், மங்களூரு கன்கனாடி காவல் நிலையப் பகுதியில் ஆட்டோ ஒன்று நேற்று மாலை 5 மணி அளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பயணியின் பையில் இருந்த மர்மப்பொருள் வெடித்து சிதறியது. இதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பயணி படுகாயமடைந்தனர். இதனையடுத்து தீக்காயங்களுடன் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தடய அறிவியல் துறையும், மாநில காவல் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தால் மங்களூரு நகரில் பொதுமக்களிடையே பதற்றத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தடய அறிவியல் துறை ஆய்வுக்குப்பின் உண்மையான காரணம் தெரியவரும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும், வதந்திகளுக்கு நம்ப வேண்டாம் எனவும் மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாதச் செயல் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல என கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது டுவிட்டர் பதிவில், "இது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல, ஆனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பயங்கரவாதச் செயல். கர்நாடக மாநில காவல்துறை, மத்திய அமைப்புகளுடன் சேர்ந்து இது குறித்து ஆழமாக விசாரித்து வருகிறது என கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். இது பயங்கரவாதம் தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மாநில காவல்துறையுடன், மத்திய புலனாய்வுக் குழுக்களும் கைகோர்க்கும் என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் இருவர் பலத்த காயமடைந்த நிலையில், அதன் எதிரொலியாக சென்னையில் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் கோவையில் கார் வெடித்து சிதறியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து நடைபெற்ற என்ஐஏ விசாரணையில் தீவிரவாதச் செயல் உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக பல பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து என்ஐஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு தமிழக முதல்வர் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?