மும்பைவிமான நிலையம்- சிவசேனா கட்சியினர் அதானி பெயர் பலகையை அடித்து நொறுக்கினர்

மும்பை விமான நிலையம்
சத்ரபதி சிவாஜியை விட அதானி பெரிய இவரா..? விமான நிலையத்தில் சிவசேன செய்த பரபரப்பு சம்பவம்..எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பெயர் பலகையை அடித்து நொறுக்கினர்,
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தை ஆந்திராவை சேர்ந்த ஜி.வி.கே. நிறுவனம் நிர்வகித்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஜி.வி.கே. நிறுவனத்திடம் இருந்து அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மும்பை மேற்கு விரைவு சாலையில் விமான நிலையம் அருகில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை அருகில் ''அதானி விமானநிலையம்'' என்ற நியான் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது.
மும்பையில் உள்ள விமான நிலையத்தின் பெயரை அதானி என பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் விமான நிலையத்தின் பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கினர். இந்தியாவில் உள்ள ஏழு விமான நிலையங்களை மத்திய அரசு அதானி குழுமத்திடம் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இருப்பினும் மும்பை விமான நிலையத்தைக் கடந்த ஜூன் 13ஆம் தேதியிலிருந்து அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கு வைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி என்ற பெயரை மாற்றி அதானி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். மேலும் விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர். இதுகுறித்து சிவசேனா கட்சி எம்.பி., அரவிந்த் சாவந்த் ''மும்பை விமான நிலையத்தில் அதானி பெயரை முன்னிலைப்படுத்துவது சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் செயல்''எனத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பெயர் பலகையை உடைத்தவர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.மும்பை விமான நிலையம் டெல்லிக்கு அடுத்தப்படியாக நாட்டிலேயே 2-வது பரபரப்பான விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu