Threat To Mukesh Ambani முகேஷ் அம்பானிக்கு ஒரே வாரத்தில் 3வது கொலை மிரட்டல்

Threat To Mukesh Ambani முகேஷ் அம்பானிக்கு ஒரே வாரத்தில் 3வது கொலை மிரட்டல்
X

முகேஷ் அம்பானி 

முன்னதாக, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து ரூ. 20 கோடி கேட்டு முதல் மின்னஞ்சல் வந்ததை அடுத்து, மும்பையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது .

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து ரூ. 400 கோடி கேட்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.

முகேஷ் அம்பானியின் நிறுவனத்திற்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் வந்தது.

நான்கு நாட்களில் முகேஷ் அம்பானிக்கு அனுப்பப்பட்ட மூன்றாவது மிரட்டல் மின்னஞ்சல் இது . முன்னதாக, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து ரூ.20 கோடி கேட்டு முதல் மின்னஞ்சல் வந்ததை அடுத்து, தொழிலதிபரின் பாதுகாப்புப் பொறுப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது .

சனிக்கிழமையன்று, நிறுவனத்திற்கு ரூ.200 கோடி கேட்டு மற்றொரு மின்னஞ்சல் வந்தது .திங்களன்று வந்த மூன்றாவது மின்னஞ்சலில் ரூ. 400 கோடி கேட்டு மிரட்டல் விடப்பட்டது.

மும்பை காவல்துறை,மும்பை குற்றப்பிரிவு மற்றும் சைபர் குழுக்கள் மின்னஞ்சல் அனுப்பியவரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன .

கடந்த ஆண்டு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் அழைப்பு விடுத்ததற்காக பீகாரின் தர்பங்காவை சேர்ந்த ஒருவரை மும்பை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மும்பையில் உள்ள சர் எச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடி வைத்து தகர்க்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்