உலக அளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம்

பைல் படம்.
மார்னிங் கன்சல்ட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரபல உலக தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு எதிராக 18 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இந்த பட்டியலில் மெக்சிகோ அதிபர் லாபெஸ் ஒபராடோர் 68 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 62 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu