விற்பனைக்கு தயாராக உள்ள மோடி மாம்பழம்: என்ன ஸ்பெஷல்?

விற்பனைக்கு தயாராக உள்ள மோடி மாம்பழம்: என்ன ஸ்பெஷல்?
X

பைல் படம்.

பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் புதிய ரக மாம்பழம் விற்பனைக்கு வர தயாராக உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் மாம்பழ ஆராய்ச்சியாளரான உபேந்திர சிங். பல மாம்பழ வகைகளை ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்ட இவர், இரண்டு உள்ளுர் மாம்பழ வகைகளை இணைத்து புதிய ரக மாம்பழத்தை உருவாக்கியுள்ளார்.

அது, பிரதமர் மோடியின் 56 அங்குல மார்புப் பகுதியை நினைவுபடுத்தியதால், உபேந்திர சிங் அந்த ரகத்திற்கு பிரதமர் மோடியின் பெயரையே வைக்க திட்டமிட்டுள்ளார். அதனால், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில், மோடி மாம்பழம் என்ற பெயரிலேயே பதிவு செய்ய இந்த ரகத்தை உபேந்திர சிங் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து மாம்பழத்தை சுவைத்துப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள், இதன் சுவை வித்தியாசமானதாக இருப்பதாக தெரிவித்து, அதற்கு மோடி மாம்பழம் என பெயரிட ஒப்புதலும் வழங்கினர்.

லக்னோவின் மலிஹாபாத்தில் கிடைக்கும் உலகப் புகழ்பெற்ற மாம்பழ ரகமான தஸ்ஸேரியின் சுவையை, மோடி மாம்பழம் ஒத்து இருந்தாலும் சற்று இனிப்பு சுவை மிகுந்து இருப்பதாகவும் சுவைத்துப் பார்த்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மோடி மாம்பழம் சுமார் 450 கிராம் எடை கொண்டுள்ளது. தற்போது மோடி மாம்பழங்களின் 1000 மரக்கன்றுகள் விற்பனைக்கு வர தயாராக உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனக்கு மாம்பழம் பிடிக்கும் என்று வெளிப்படுத்திய பின்னர், அவர் பெயரிலேயே மாம்பழ ரகம் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது