உள்நாட்டு தயாரிப்பில் ரோந்து படகுகள்: இந்திய கடலோர காவல்படைக்கு வருகிறது

உள்நாட்டு தயாரிப்பில் ரோந்து படகுகள்: இந்திய கடலோர காவல்படைக்கு வருகிறது
X
இந்திய கடலோர காவல்படைக்கு ரூ. 473 கோடியில் உருவாகவுள்ள 8 விரைவு ரோந்து படகுகள்

இந்திய கடலோர காவல்படைக்கு புதிய 8 ரோந்து படகுகள் கட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ரூ. 473 கோடிக்கு பாதுகாப்பு அமைச்சகம் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இணை செயலர் (கடல்சார் & அமைப்புகள்) தினேஷ்குமார் மற்றும் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான பிபி நாக்பால் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் புதுடில்லியில் நடந்த நிகழ்வில் கையெழுத்திட்டனர்.

உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு கோவா கப்பல் கட்டும் தளத்தில் இந்த படகுகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த 8 படகுகளும் ஆழமற்ற கடல் பகுதிகளிலும், பரந்த கடற்கரையோரத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயல்பட உள்ளன.

தற்சார்பு பாரதத்தை முதன்மையாக கொண்டு, உள்நாட்டிலேயே கப்பல் கட்டுவதை ஊக்குவித்தல், இத்துறையின் வேலைவாய்ப்பை அதிகரித்தல் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும். மேலும், இந்தியாவை, பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு முனையமாக்கும் இந்திய அரசின் உறுதியை வலுபடுத்தி, உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதோடு ஏற்றுமதி சந்தையையும் பூர்த்தி செய்கிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!