/* */

அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களிடம் தவறான புரிதல்: தூத்துக்குடியில் தமிழக ஆளுனர் ரவி வேதனை

அக்னிபத் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு இளைஞர்கள் பொதுச்சொத்தை சேதப்படுத்துவதாக, ஆளுனர் ரவி வேதனை தெரிவித்தார்.

HIGHLIGHTS

அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களிடம் தவறான புரிதல்: தூத்துக்குடியில் தமிழக ஆளுனர் ரவி வேதனை
X

தமிழக ஆளுனர் ரவி.

அக்னிபத் என்னும் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் ரயில் எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கு, இந்த திட்டம் குறித்து இளைஞர்கள் இடையே சரியான புரிதல் இல்லாதது தான் காரணம் என்னும் கருத்து பரவலாக பேசப்படுகிறது.

இதற்கிடையில், தூத்துக்குடி காமராஜர் கலை அறிவியல் கல்லூரியில் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என.ரவி பங்கேற்றார்.

பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு வ.உ.சிதம்பரனார் பெயரில் ஆளுனர் விருதுகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, ஆளுனர் ரவி பேசியதாவது: அக்னிபாத் திட்டத்தில், 17 வயது மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் இளைஞர்களுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம். வருமானம் தரக்கூடியது. இதில் சேருவோருக்கு 4 ஆண்டு முடிவில் ரூ.12 லட்சம் தரப்படும். ஆனால், நல்ல ஒரு திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு இளைஞர்கள் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது வேதனை அளிக்கிறது. அக்னி பத் திட்டம் மூலம் இளைஞர்களின் தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கமும் மேம்படும். இவ்வாறு, தமிழக ஆளுனர் ரவி குறிப்பிட்டார்.

Updated On: 18 Jun 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...