உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த "அலையன்ஸ்- ஏர் ஏவியேஷன்" இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

நாடு முழுவதும் சுற்றுலாவை ஊக்கப்படுத்த சுற்றுலா அமைச்சகம் - அலையன்ஸ் ஏர் ஏவியேஷன் நிறுவனம் (ஏஏஏஎல்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ( 2022, பிப்ரவரி 17 ) இன்று புதுதில்லியில் கையெழுத்தானது. சுற்றுலா உருவாக்கும் சந்தைகளில் முக்கிய இடமாக இந்தியாவை நிலைநிறுத்த சுற்றுலா அமைச்சகம் முயற்சி செய்யும் நிலையில், உள்நாட்டில் மிகப் பரந்த தொடர்புகளை கொண்டுள்ள அலையன்ஸ் ஏர் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வது இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் தலைமை இயக்குநர் ருப்பிந்தர் பிரார், அலையன்ஸ் ஏர் ஏவியேஷன் நிறுவனம் சார்பில் தலைமை நிர்வாக அதிகாரி திரு வினீத் சூட் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பிரதமரின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட மத்திய அரசின் "பி்ராந்திய போக்குவரத்து தொடர்பு திட்டத்தை" மேம்படுத்துவதில் அலையன்ஸ் ஏர் முன்னணியில் உள்ளது. மேம்பாட்டு முயற்சிகளில், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்தல், கண்காட்சிகள், பொருட்காட்சிகளில் பங்கேற்றல், கருத்தரங்குகள், பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்தல், விருந்தோம்பல் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பயணம் செய்ய ஊடகங்களுக்கும் பயண ஏற்பாடு செய்வோருக்கும் அழைப்பு விடுத்தல் போன்ற பணிகள் இடம் பெறும். இந்த ஒப்பந்தத்திலிருந்து பயன்பெற பயணச் சுற்றுலா சம்பந்தப்பட்டவர்களை அமைச்சகம் ஒருங்கிணைத்துக் கொண்டுவரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu