8வது சர்வதேச யோகா தினம் கொண்டாட ஆயுஷ் அமைச்சகம் சிறப்பு ஏற்பாடு

8வது சர்வதேச யோகா தினத்தின் 50வது கவுண்டவுன் தினத்தை குறிக்கும் வகையில் அசாமின் சிவசாகர், ரேங்கர் மைதானத்தில் அசாம் மாநில அரசுடன் இணைந்து மிகப்பெரிய நிகழ்ச்சிக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்வானந்த சோனோவால், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, முஞ்ச்பாரா மகிந்திரபாய், அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் மாநில ஆயுஷ் அமைச்சர் கேஷப் மஹந்தா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். சிவசாகர், ஆதிச்சநல்லூர் ஆகிய இந்தியாவில் 5 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்துவதற்கான திட்டத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளதே, யோகா உத்சவ நிகழ்ச்சிக்கு சிவசாகர் தேர்ந்தெடுக்கப்பட காரணம் ஆகும்.
"ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" கொண்டாடும் வேளையில் 8 வது சர்வதேச யோகா தினம் வருவதால், நாடு முழுவதும் உள்ள 75 தொல்பொருள் சின்னங்களில் யோகா தினத்தை கடைபிடிக்க ஆயுஷ் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்த கவுண்ட்டவுன் திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. யோகாவின் பல்வேறு பரிமாணங்கள், அதன் பயன்பாடு மற்றும் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்திற்கான கவுண்ட்டவுன் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம் ஆகும் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu