குடும்ப பிரச்சனையில் மந்திரி மருமகள் திடீர் தற்கொலை- பரபரப்பு

குடும்ப பிரச்சனையில் மந்திரி மருமகள் திடீர் தற்கொலை- பரபரப்பு
X
குடும்பப் பிரச்சனையில் விரக்தியடைந்து, அமைச்சரின் மருமகள் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி உள்ளது. மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருப்பவர், இந்தர் சிங் பர்மர். அவரது மகன் தேவராஜ் சிங் - மருமகள் சவிதா பர்மர் (22). இருவரின் திருமணமும் 3 ஆண்டுகளுக்கு முன்புதான் நடந்துள்ளது.

அண்மைக் காலமாக, தேவராஜ் சிங் - சவிதா பர்மர் இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மன உளச்சலில் இருந்த சவிதா, சில நாட்களாக யாருடனும் சரிவர பேசாமல் விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், பொஞ்சனோ என்ற தனது சொந்த ஊரில், நேற்று மாலை சவிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டில் அமைச்சர் இந்தர் சிங் பர்மரோ, கணவர் தேவராஜ் சிங் உள்ளிட்டோர் இல்லை. வேறு சில உறவினர்களே இருந்துள்ளனர்.

அமைச்சர் இந்தர் சிங் பர்மர்

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சவிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். சவிதா பர்மாவின் தற்கொலை செய்தி அறிந்ததும், அமைச்சர், அவரது ஆதரவாளர்கள், பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். எனினும், பிரதேச பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அமைச்சரின் மருமகள் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உறுதியாக தெரியவரும்.

மூத்த அமைச்சரின் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!