இந்தியா ஜப்பானிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம், ஜப்பானின் கியோடோவில் உள்ள கியோடோ பல்கலைக்கழகத்தின் நீடித்த மனிதமண்டல ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு எடுத்துரைக்கப்பட்டது. கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பகிர்தலுக்கான இந்த ஒப்பந்தம், இந்தியாவில் 2020 நவம்பர் 4 அன்றும், ஜப்பானில் 2020 நவம்பர் 11 அன்றும் கையெழுத்திடப்பட்டு தபால் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
நோக்கங்கள்
* வளிமண்டல அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கூட்டு அறிவியல் சோதனைகள்/பிரச்சாரங்கள் மற்றும் தொடர்புடைய மாதிரி படிப்புகள் ஆகியவற்றில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகமும், நீடித்த மனித மண்டல ஆராய்ச்சி நிறுவனமும் தங்களது ஆராய்ச்சி வசதிகள், அறிவியல் பொருட்கள், வெளியீடுகள் மற்றும் தகவல்கள், கூட்டு ஆராய்ச்சி கூட்டங்கள் மற்றும் பயிற்சி பட்டறைகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து இணைந்து பணிபுரிய இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
ஜப்பானின் ஷிகராகியில் உள்ள நடுத்தர மற்றும் உயர்தர வளிமண்டல ராடார், இந்தோனேசியாவின் கொடோடாபாங்கில் இருக்கும் பூமத்திய ரேகை வளிமண்டல ராடார், நீடித்த மனிதவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள உபகரணங்கள் மற்றும் நீடித்த மனித மண்டல ஆராய்ச்சி நிறுவன ஆய்வகத்தில் உள்ள மத்திய மண்டல-அடுக்கு மண்டல - வெப்ப மண்டல ராடார் மற்றும் இதர உபகரணங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
பின்னணி:
வளிமண்டல அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானிகளின் பரிமாற்றம் ஆகிய துறைகளில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகமும், நீடித்த மனித மண்டல ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து பணியாற்றி வருகின்றன. 2008-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் இந்த ஏற்பாடு தொடங்கியது. மேற்கண்ட ஒப்பந்தமானது 2013-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. கூட்டு ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் புதிய வழிகாட்டுதல்களின் படி 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் இருதரப்பாலும் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது.
நீடித்த மனித மண்டல ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய வளிமண்டல ராடார் குறித்த சர்வதேச பள்ளியில் வள-நபர்களாக தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் பணியாற்றினர். தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு வருகை தந்த கியோடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு, இரு நிறுவனங்களாலும் நடத்தப்படும் கூட்டு ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்கான பயிற்சி பட்டறையை நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu