கோவா கடற்படைப் போர்க்கப்பல் கல்லூரில் நாளை கடல்சார் கருத்தரங்கம்

கோவா கடற்படைப் போர்க்கப்பல் கல்லூரில் நாளை கடல்சார் கருத்தரங்கம்
X

பைல் படம்.

கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியில் வரும் 31ம் தேதி முதல் கோவா கடல்சார் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியில் வரும் 31ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நான்காவது கோவா கடல்சார் கருத்தரங்கம் (ஜிஎம்எஸ்) நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கத்தில் இந்தியா, பங்களாதேஷ், கொமரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நட்பு நாடுகளின் கடற்படை, கடல்சார் பாதுகாப்புப்படைகளைச் சேர்ந்த கேப்டன்கள், கமாண்டர்கள் மற்றும் அதற்கு இணையான நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டில் இந்திய கடற்படையால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட கோவா கடல்சார் கருத்தரங்கம், இந்தியாவிற்கும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் நாடுகளுக்கும் இடையே கூட்டு நடவடிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த தளமாக திகழ்ந்து வருகிறது.

இந்த கடல்சார் கருத்தரங்கம் கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. மேலும் இந்த கருத்தரங்கு ஏற்கெனவே 3 முறை நடைபெற்றுள்ளது. நாளை தொடங்கும் இந்த கருத்தரங்கை கடற்படை போர் கல்லூரியின் கமாண்டன்ட் வைஸ் அட்மிரல் ராஜேஷ் தன்கர் தொடங்கி வைக்கிறார்.

21 ஆம் நூற்றாண்டின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்திய பெருங்கடல் பிராந்தியம் ஒரு முக்கிய மையமானது. இதனைக்கருத்தில் கொண்டு கடல்சார் களத்தில் விரிவான பாதுகாப்பிற்கான கொள்கைகள், நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தும் வழிமுறைகளை உருவாக்குவதற்கான அனைத்து பங்கேற்பாளர்களையும் ஒன்றிணைப்பதில் இந்த கருத்தரங்கம் முக்கிய பங்காற்றுகிறது.

கோவா கடல்சார் கருத்தரங்கம் (ஜிஎம்எஸ்) 2022-யின் கருப்பொருள் "இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு சவால்கள்: கடல்சார் முக்கிய செயல்பாடுகளை ஒன்றாக இணைத்து கூட்டு கட்டமைப்பாக மாற்றுதல்" ஆகும். பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (சாகர்) மற்றும் பாரதப் பிரதமரால் அறிவிக்கப்பட்ட கடல்சார் பாதுகாப்பின் ஐந்து கொள்கைகள், அதாவது நமது பிராந்தியத்தின் செழிப்பு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் கருப்பொருள் விளக்கம் அளிக்கின்றது.

இந்தியாவின் முப்படைகளுக்கான கல்வி நிறுவனங்கள் (Military academies in India) இந்திய இராணுவத்தின் முப்ப்டைகளின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி, போர் யுக்தி மற்றும் பயிற்சி வழங்க இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகள் உள்ளது.

கோவா கடற்படைப் போர்க்கப்பல் கல்லூரியில் இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதேபோல் கோவா உள்ளிட்ட நாடு முழுவதும் 15 இடங்களில் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோவாவில் தேசிய நீரியல் நிறுவனமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!