மணிலால் காந்தி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மறைந்த தினமின்று.

கஸ்தூரிபாய்-காந்தி இணையரின் இரண்டாவது மகனாட மணிலால் காந்தி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மறைந்த தினமின்று..
மணிலால் காந்தி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய்-காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897 இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார்.
1917 இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட 'இந்தியன் ஒபீனியன்' என்ற வார இதழில் பணியாற்றினார். 1918 இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் காந்தி (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். சீதாவின் மகளான உமா டி.மெஸ்திரி அண்மையில் மணிலால் வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டார்
மணிலால் காந்தியின் மகள் தான் ஏலா காந்தி. இவர் தென் ஆப்பிரிக்காவின் பீனிக்ஸில் பிறந்தார். நேட்டால் பல்கலைக் கழகத்தில் படித்து சிறந்த சமூக சேவகியாகி "காந்தி டிரஸ்ட்' எனும் அமைப்பை நடத்தி வருகிறார். தென் ஆப்பிரிக்க பார்லிமென்ட் மெம்பராக இருந்தவர். நெல்சன் மண்டேலாவின் ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸில் இணைந்து பல பணிகள் ஆற்றியவர்.
காந்திஜியின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது தென் ஆப்பிரிக்க மண்தான். அங்கு காந்தி ரயிலில் பயணித்தபோது ஆங்கிலேய நிற வெறியாளரால் ரயிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டதன் விளைவாக எழுந்ததுதான் சத்தியாகிரகப் போராட்டம்.
சில வருடங்களுக்கு முன் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவிற்கு இந்தியர்கள் பலரை ஏலா காந்தி தென் ஆப்பிரிக்காவிற்கு அழைத்திருந்தார். "உலக சமாதானக் குழு' உறுப்பினராக அவ்விழாவில் நானும் கலந்து கொண்டபோது.. அவரது அன்பைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது.
ஏலா காந்தியும் தன் தாத்தாவைப் போன்றே மென்மையானவர். "நான் இரண்டு சுதந்திர தினங்களைப் பார்த்திருக்கிறேன். ஒன்று நம் பாரத சுதந்திரம். அப்போது பெற்றோருடன் இந்தியா வந்திருந்தேன். பாட்டி வீட்டிற்குச் (அம்மாவின் அம்மா) சென்றபோது அந்தக "கிராம மக்கள் "காந்தியின் பேத்தி' என்று சின்னப் பெண்ணான என்னைக் கொடியேற்றச் சொன்னார்கள். நான் பார்த்த இரண்டாவது சுதந்திரம், தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரம்' என்று நினைவு கூர்ந்தார் ஏலா.
"இப்போது பல போராட்டங்கள் வன்முறைகளை வெளிப்படுத்துகின்றன. ஆனால் எங்களின் அறப்போர்கள் எல்லாம் காந்திய வழியில் இருந்தன. ஏழை எளியவர்களுக்கு நன்மை செய்யக்கூடியதை நாம் செய்யவில்லை என்றால் நாம் எதையும் சாதிக்கவில்லை என்றே அர்த்தம்' என்று ஏலா காந்தி பேசியது இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.
2007ல் இந்திய அரசு "பத்ம பூஷண்' விருதளித்து ஏலா காந்தியை கௌரவப்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu