Mangoes on EMI பணம் இல்லைனாலும் பரவாயில்ல... இஎம்ஐ-ல் மாம்பழம் வாங்குங்க!

Mangoes on EMI பணம் இல்லைனாலும் பரவாயில்ல... இஎம்ஐ-ல் மாம்பழம் வாங்குங்க!
X
இ எம் ஐ யில் மாம்பழம் வாங்கலாம் என அறிவித்துள்ளார் மகராஷ்டிராவைச் சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர். இந்த செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மாம்பழம் வாங்க காசு இல்லையா. கவலைய விடுங்க. இதோ வந்துவிட்டது இ எம் ஐ. பொது மக்கள் பெரிதும் விரும்பும் மாம்பழங்களை வாங்க சிரமப் படக்கூடாது. அதிகரிக்கும் விலையால் அவதிப் பட கூடாது என நினைத்த புனேவைச் சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர், இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இப்போது சாப்பிடுங்கள்.. பின்னர் காசு குடுங்கள் என்கிறார் அவர்.


வீடு, காடு, கார், பைக், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக, அன்றாட தேவைக்குரிய பொருட்களை அதன் விலை அதிகம் என்பதால் வாங்கமுடியாமல் இருந்த நடுத்தர வர்க்கத்து நபர்களை குறி வைத்து அவர்களின் சிரமத்தை குறைக்கவேண்டும் அதேநேரம் அவர்களையும் பொருட்களை வாங்கச் செய்யவேண்டும் எனும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இஎம்ஐ.

ஒரு பொருளை நீங்கள் விலைக்கு வாங்குவதற்கு பதிலாக இஎம்ஐயில் வாங்கினால் மாத சம்பளம் வாங்கி அதில் ஒரு பகுதியை கடனுக்கு அடைத்து ஒரு வருடம், 2 வருடம் முதல் 10 வருடங்கள் 20 வருடங்கள் என அவரவர் வசதிக்கேற்ப இந்த கடனை அடைக்கும் நடைமுறைதான் இஎம்ஐ.


ஆரம்பத்தில் இன்ஸ்டால்மண்ட் எனும் பெயரில் சிறு சிறு நிறுவனங்கள் கொடுத்த ஆஃபர்களை இப்போது பெரு நிறுவனங்களும் தருகின்றன. சரி இதெல்லாம் பரவாயில்லை. மாம்பழத்தையும் இஎம்ஐயில் தருகிறார்களாம்.

மாம்பழம் விக்குற விலையில் அதை இஎம்ஐயில் தான் வாங்க முடியும் என்று மீம் பார்த்து ரசித்திருப்போம். அதை உண்மையாகவே மாற்றியிருக்கிறார் புனே வியாபாரி ஒருவர்.


நாளுக்கு நாள் பண வீக்கம் அதிகரித்து வர சேர்த்து வைத்த பணம் கூட மதிப்பு குறைந்து பணத்தைத் தேடி ஓட வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியா வந்திருக்கிறது. இதில் விலைவாசி உயர்வு ஒரு பக்கம். அன்றாடம் தேவைப்படும் தக்காளி, பல்லாரியே வாங்க முடியாமல் இருக்க, மாம்பழத்தை வேறு வாங்கி சாப்பிட வேண்டுமா என ஏழை மக்கள் நினைக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரும் மாம்பழம் வசதியானவர்களுக்கானது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மக்களின் வாங்கும் சக்தி அப்படி குறைந்துகொண்டே வருகிறது. இதனால், சத்தான தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி சாப்பிட கடும் சவாலை எதிர்கொள்கின்றனர். இதனாலேயே புனே பழ வியாபாரிகள் புது யோசனையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுதான் இஎம்ஐயில் மாம்பழம் திட்டம்.


அல்போன்சா மாம்பழ பிரியர்கள் தங்களுடைய பொருளாதார பிரச்னைகளுக்கு மத்தியில் பழம் வாங்க கவலைப் பட வேண்டாம். விரும்பும் போது மாம்பழங்களை வாங்கிக் கொண்டு கிரெடிட் கார்டுகள் மூலம் 3 முதல் 18 மாத தவணைகளாக மாற்றி செலுத்த முடியும். இதற்காக பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இனி மாம்பழங்களை மொத்தமாக இஎம்ஐயில் வாங்கிக் கொண்டு வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப தவணைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்