மேற்குவங்கம் பபனிபூர் தொகுதியில் மம்தா போட்டியிட வாய்ப்புள்ளது.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க வேளாண் அமைச்சரும், மூத்த திரிணாமுல் தலைவருமான சோபந்தேப் சட்டோபாத்யா, பபனிபூர் சட்டமன்றத் தொகுதியை ராஜினாமா செய்ததன் மூலம் மம்தா பானர்ஜி இடைத்தேர்தலில் போட்டியிட வழி வகுத்துள்ளார்.
சட்டோபாத்யே தனது ராஜினாமாவை சட்டமன்ற சபாநாயகர் பிமான் பாண்டியோபாத்யாவிடம் அளித்தார்.
இது குறித்து சபாநாயகர் கூறும்போது, சோபந்தேப் சட்டோபாத்யா பபானிபூர் தொகுதியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். எந்தவொரு அழுத்தமும் அச்சுறுத்தலும் இல்லாமல் அவர் சுயமாக முடிவெடுத்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டேன் என்று கூறினார்.
மம்தா தலைமையில் தான் வங்காளம் முன்னேற முடியும் என்பதால் அவரது வெற்றியை உறுதி செய்ய நாங்கள் பணியாற்ற வேண்டியது அவசியம். சட்டசபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவதை பற்றி கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் நடந்தன, இந்த விஷயத்தில் என்னிடம் கேட்டனர், நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன் என்று சட்டோபாத்யா கூறினார். சட்டோபாத்யாவை ராஜ்யசபாவிற்கு பரிந்துரைக்கலாம் என கூறப்பட்டாலும் அதில் தனக்கு விருப்பமில்லை என்று தெளிவுபடுத்தினார்.
நந்திகிராமில் இருந்து சமீபத்தில் முடிவடைந்த தேர்தலில் தோல்வியடைந்த பானர்ஜி, முதல்வராக தொடர வேண்டுமெனில் ஆறு மாதங்களுக்குள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இருப்பினும், கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், பானர்ஜியின் போட்டியிடுவது குறித்து கருத்து கூறவில்லை. மேலும் கட்சி தகுந்த நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
முன்னதாக, ராஷ்பேஹரி தொகுதி உறுப்பினரான சட்டோபாத்யா, இந்த ஆண்டு பபானிபூரிலிருந்து போட்டியிட்டு, பாஜகவின் ருத்ரானில் கோஷை அதிக வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2011 மற்றும் 2016 தேர்தல்களில் இங்கு மம்தா வென்றிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu