/* */

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி: மம்தா சாடல்

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி அளிக்கப்படுகிறது என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை சாடியுள்ளார்.

HIGHLIGHTS

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி: மம்தா சாடல்
X

மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சாகர்தீகி நகரில் நடந்த நிர்வாக ரீதியிலான மறுஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறும்போது, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மேற்கு வங்காளம், மத்திய அரசின் நிதி உதவி இன்றி மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏன் இந்த வேற்றுமை? மத்திய அரசின் எந்தவித உதவியும் இன்றி இதனை நாங்கள் செய்து வருகிறோம். மத்திய அரசு எங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும். ஆனால், நிதியை விடுவிக்காமல் உள்ளது. பல முறை இந்த விவகாரம் பற்றி எடுத்து கூறியும் அதில் பலனில்லை.

இந்த ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது, மத்திய அரசின் தனிப்பட்ட நிதியல்ல. அது மாநிலத்தில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கான உரிமை.

வங்காள மக்களுக்கான அரிசியை தராமல் மத்திய அரசு இழப்பை ஏற்படுத்த முடியாது. வங்காள மக்கள் அதிகம் சாப்பிட கூடிய உணவு அரிசி. அதிலும், ஏழைகள் அதிகம் உட்கொள்ள கூடியது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி கிடைக்கிறது பாஜக ஆளும் மாநிலங்கள், 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி பெறுகின்றன. என மத்திய அரசை மம்தா பானர்ஜி சாடி பேசியுள்ளார்

மேற்கு வங்காளத்திற்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிட மத்திய குழுக்கள் சென்றபோது, அவர்கள் மாநில அரசாங்கத்தை "தொல்லை செய்ய" அனுப்பப்பட்டதாக பானர்ஜி குற்றம் சாட்டினார்.

"பாஜக தலைவர் வீட்டில் மின்மினிப் பூச்சி புகுந்தாலும் மேற்கு வங்கத்துக்கு மத்தியக் குழு அனுப்பப்படுகிறது, எந்த ஒரு சம்பவத்துக்கும் இதுபோன்ற குழுக்களை உத்தரப் பிரதேசம், டெல்லி, குஜராத் என மாநிலங்களுக்கு அனுப்பாதது ஏன்? அற்ப விஷயங்களுக்கு மத்திய அரசுமத்தியக் குழுக்களை அனுப்பி மேற்கு வங்கத்தை துன்புறுத்துகிறது" என்று அவர் மேலும் கூறினார்

Updated On: 17 Jan 2023 5:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்