கேரள மாடல் அழகி சஹானா மர்ம மரணம்: கணவர் கைது
கேரளா மாடல் நடிகை சஹானா
கேரளா மாநிலம் காசர்கோடுயில் இருக்கும் செருவத்தூரை சேர்ந்தவர் மாடல் அழகி சஹானா. இவர் பல விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். இவர் சஜ்ஜாத் என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கோழிக்கோட்டில் வசித்து வந்தனர்.
இதனிடையே கணவருடன் இணைந்து, மாமியார் மற்றும் மைத்துனர் தன்னை கொடுமைப்படுத்துவதாக சஹானா தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து உள்ளார். இதனால் இருவரும் தனிக்குடித்தனம் செல்லுமாறு அவரது தாய் பரிந்துரை செய்தார். அதன் பேரில் இருவரும் சில வாரங்களுக்கு முன்பு பரம்பில் பஜாரில் இருக்கும் வாடகை வீட்டில் குடியேறினர்.
இந்நிலையில் சஹானா நேற்று முன்தினம் தனது 21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவர் நள்ளிரவு 1 மணியளவில், இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது.
அவர் கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதை தொடர்ந்து அவரது கணவர் சஜ்ஜாத்தை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சஹானாவின் தாயார், என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள். அவள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று கூறினார். இது கொலையா இல்லை தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu