தக்காளி படுத்தும் பாடு, கணவரை பிரிந்த மனைவி

தன்னை கேட்காமல் கணவர் தக்காளியை பயன்படுத்தியதால் கோபித்துக்கொண்டு வெளியேறிய மனைவி
தக்காளியின் விலை உயர்ந்து வரும் நிலையில், தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் தனது டிபன் தேவைக்காக இரண்டு தக்காளிகளை தனது கணவர் பயன்படுத்தி உணவு சமைத்ததால் மனைவி மனமுடைந்தார்.
தக்காளியின் விலை உயர்ந்து வருவது பலரின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது, ஆனால் இந்த விலை உயர்வு மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே சண்டைக்கு காரணமாக அமைந்தது.
டிபன் சர்வீஸ் நடத்தும் சஞ்சீவ் பர்மன், சமீபத்தில் தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டது.
தக்காளியைப் பயன்படுத்துவதைப் பற்றி அவர் தன்னிடம் கலந்தாலோசிக்காததால் அவரது மனைவி வருத்தப்பட்டார்.
வாக்குவாதத்திற்குப் பிறகு, அவர் மகளுடன் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினார். கணவர் அவர்களை கண்டுபிடிக்க முயன்றார் ஆனால் முடியவில்லை. பின்னர், உதவிக்காக உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்றார்.
சஞ்சீவ் புகார் அளித்ததை மூத்த காவல் அதிகாரி உறுதிப்படுத்தினார். சஞ்சீவ், தான் சமைத்துக்கொண்டிருந்த காய்கறிப் பாத்திரத்தில் இரண்டு தக்காளியைப் போட்டதால் வாக்குவாதம் தொடங்கியதாகக் கூறினார். மூன்று நாட்களாக மனைவியிடம் பேசவில்லை என்றும், அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை என்றும் கூறினார். காவல் அதிகாரிகள் அவரது மனைவி விரைவில் வருவார் என்று உறுதியளித்தனர்.
பழத்தினால் பரமசிவன் குடும்பம் பிரிந்து ஒருவர் பழனிக்கு போய் விட்டார். இங்கு மனைவி பிரிந்து சென்று விட்டார். பழத்தினால் வரும் பிரச்னை. அது மாம்பழம், இது தக்காளி அவ்வளவு தான்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu