நாடாளுமன்ற தேர்தல்: ஏழு கட்ட வாக்குப்பதிவு
தேர்தல் - கோப்புப்படம்
வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும். லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் தொடங்குகிறது; ஜூன் 4ம் தேதி முடிவுகள்
ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு
2ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ம் தேதி
மே 7ம் தேதி 3ம் கட்ட வாக்குப்பதிவு
மே 13ம் தேதி 4ம் கட்ட வாக்குப்பதிவு
மே 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு
மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு
ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவு
முடிவுகள்: ஜூன் 4
தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியுள்ளதை பார்க்கலாம்,
1. “வாக்குச் சாவடிகளில் தேவையான் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
2. சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யலாம். ஆனால் போலிச் செய்திகளைப் பரப்பக்கூடாது.
3. சமூக விரோதிகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை பாயும். பணம், பொருட்கள், மது விநியோகம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
4. வாக்குக்கு பணம் பொருள் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
5. தேர்தலில் இயன்வரை வன்முறைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
6. ட்ரோன மூலம் மாநில எல்லைகள் கண்காணிக்கப்படும். நாடும் முழுவதும் சோதனைச் சாவடிகள் மூலமாகவும் கண்காணிக்கப்படும்.
7. வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை செயலிகள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறையினர் கண்காணிப்பார்கள்.
8. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முழுவதுமாகக் கண்காணிக்கப்படும்.
9. சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசில் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரையில் கண்ணியத்துடன் ஈடுபட வேண்டும்.
10. மதரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது. விளம்பரங்களை நம்பத்தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது.
11. தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தக்கூடாது.
12. நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu