அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்: அதிகாரிகளை மாற்றிய அரசு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் பார்வையிட சென்ற மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை கோபமடைந்த உள்ளூர் மக்கள் முற்றுகையிட்ட மறுநாள், மத்தியப் பிரதேச அரசு ஷியோபூர் கலெக்டர் மற்றும் எஸ்பியை இடமாற்றம் செய்தது.
மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் மற்றும் பிற வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. வெள்ளம் குறித்து சரியான நேரத்தில் எச்சரிக்கப்படவில்லை என்று உள்ளூர் மக்கள் கோபத்தில் இருந்தனர்.
மொரேனா தொகுதி எம்பியான அமைச்சர் தோமர், ஷியோபூர் நகரத்தில் உள்ள கராத்தியா பஜாரிற்குச் சென்றபோது, அவர் மிகவும் தாமதமாக வந்ததாகக் கூறி மக்கள் அவரை முற்றுகையிட்டனர். அவரது வாகனத்தில் சிலர் வாகனங்கள் மீது சேறு மற்றும் சிறிய கட்டைகளை வீசினர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
ஆனால் அணை உடைக்கப்பட்டதாக உருவான வதந்தியால் குழப்பம் ஏற்பட்டதாகவும், நிர்வாகம் மெத்தனமாக இருந்ததாகவும் தோமர் கூறினார்,
ஆனால் அமைச்சருக்கு சரியான பாதுகாப்பு அளிக்க தவறியதாக, மத்தியப் பிரதேச அரசு ஷியோப்பூர் கலெக்டர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவாவை மாநிலச் செயலகத்தில் துணைச் செயலாளராக மாற்றியது. குவாலியர் மாநகராட்சி ஆணையராக இருக்கும் சிவம் வர்மா ஷியோபூரின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்பி சம்பத் உபாத்யாயாவை ஏஐஜியாக மாற்றியது. தற்போது குவாலியரின் ஏஐஜியாக இருக்கும் அனுராக் சுஜானியா ஷியோபூரின் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களில் வடக்கு மத்தியப் பிரதேசத்தின் சம்பல்-குவாலியர் பகுதியில் மழை பெய்ததால் குறைந்தது 24 பேர் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu