அத்வானி, ஜோஷி ஆகியோர் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரவேண்டாம்: ராமர் கோயில் அறக்கட்டளை
முரளி மனோகர் ஜோஷி மற்றும் அத்வானி
அயோத்தியில் ராமர் கோயில் கோரி போராட்டத்தில் முன்னணியில் இருந்த பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உடல்நிலை மற்றும் வயது காரணமாக அடுத்த மாதம் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று கோயில் அறக்கட்டளைஅயோத்தியில் தெரிவித்துள்ளது.
ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இருவரும் குடும்பத்தின் பெரியவர்கள் மற்றும் அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர், அதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்,
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 15 ஆம் தேதிக்குள் ஏற்பாடுகள் முடிந்து 'பிரான் பிரதிஷ்டை' ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை தொடரும் என்று கூறினார்.
அழைக்கப்பட்டவர்களின் விரிவான பட்டியலை வழங்கிய ராய், உடல்நலம் மற்றும் வயது தொடர்பான காரணங்களால் அத்வானியும் ஜோஷியும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாமல் போகலாம் என்றார். அத்வானிக்கு இப்போது 96 வயதாகிறது, ஜோஷிக்கு அடுத்த மாதம் 90 வயதாகிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவிற்கு அழைக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
ஆறு சங்கராச்சாரியார்கள் மற்றும் சுமார் 150 துறவிகள் மற்றும் சன்யாசிகள் விழாவில் பங்கேற்பார்கள், விழாவிற்கு சுமார் 4,000 சன்யாசிகளும் 2,200 விருந்தினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
காசி விஸ்வநாத், வைஷ்ணோ தேவி போன்ற முக்கிய கோவில்களின் தலைவர்கள் மற்றும் மத மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்,
ஆன்மிக தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், அருண்கோவில், திரைப்பட இயக்குனர் மதுர் பண்டார்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வாசுதேவ் காமத், ஐ.எஸ்.ஆர்.ஓ. நிலேஷ் தேசாய் மற்றும் பல பிரபலங்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்
கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, 'மண்டல பூஜை' ஜனவரி 24 முதல் 48 நாட்கள் சடங்கு முறைப்படி நடைபெறும். ஜனவரி 23ஆம் தேதி கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும் .
அயோத்தியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விருந்தினர்கள் தங்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு மடங்கள், கோவில்கள் மற்றும் வீட்டு குடும்பங்கள் மூலம் 600 அறைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கிடையில், அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள், கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய நகராட்சி ஆணையர் விஷால் சிங், பக்தர்களுக்காக ஃபைபர் கழிப்பறைகள் அமைக்கப்படும் என்றும், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
'ராம் கதா குஞ்ச்' ராம ஜென்மபூமி வளாகத்தில் ராமர் வாழ்க்கையின் 108 நிகழ்வுகளைக் காண்பிக்கும் வகையில் நடைபாதை அமைக்கப்படும், என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu