சொமோட்டோ நிறுவனத்திற்கு பட்டியலின ஆணையம் நோட்டீஸ்

சொமோட்டோ நிறுவனத்திற்கு பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
X

சர்ச்சைக்குள்ளான விளம்பர வீடியோவின் படங்கள்.

Zomato Served Notice For 'Casteist' Ad On World Environment Day: சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக சொமோட்டோ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Zomato Served Notice For 'Casteist' Ad On World Environment Day: உணவு விநியோக நிறுவனங்களில் ஏராளமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சோமேட்டோவும் ஒன்று. இந்த நிறுவனம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வெளியிடப்படும் விளம்பரங்கள் அவ்வப்போது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் ஸ்விக்கி நிறுவனம் ஒரு சர்ச்கையில் சிக்கியது. ரம்ஜான் பண்டிகையின்போது ஆடுகளை வெட்ட வேண்டாம் என்று விளம்பரம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Zomato kachra ad, Zomato ad, portrayal of a Dalit character in ad campaign

ஸ்விக்கி நிறுவனம் இந்துபோபியாவில் ஈடுபடுகிறது என தெரிவித்துள்ளது. அதாவது இந்து மதத்தின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தினை செய்கிறது என பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

அதே வரிசையில் தற்போது சோமேட்டோ நிறுவனம் சிக்கியுள்ளது. உலக சுற்றுக்சூழல் தினத்தை முன்னிட்டு சோமேட்டோ நிறுவனம் ஒரு விழிப்புணர்வு விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கண்டனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் #Boycottzomato என்ற ஹேஷ்டேக்கும் டிரண்டிங்கில் உள்ளது.

Food delivery platform Zomato Casteist case

அந்த வீடியோவில், கடந்த 2001ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியான 'லகான்' படத்தில் 'கச்ரா' என்ற தலித் கதாபாத்திரத்தில் ஆதித்ய லக்கிய என்பவர் நடித்திருக்கிறார். இவரை மேஜையாகவும், விளக்கு, பூந்தொட்டி, காகிதம் போலவும் சித்திரிக்கப்பட்டு, அதில் இத்தனை கிலோ குப்பைகளால் பொருட்கள் உருவாகிறது என்பதை விளக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.

’லகான்’ படத்தில் தலித்தாக காட்டப்பட்டட கதாபாத்திரத்தை இந்த வீடியோவில் குப்பைப் போல சித்திரித்திருக்கின்றனர் என நெட்டீசன்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஜாதிய பார்வையுடன் விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது. குறிப்பாக ’கச்ரா' என்றால் இந்தியில் ’குப்பை' என்று பொருள்.

trending news today in tamil, today news in tamil

இந்த வீடியோவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், சோமேட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை நீக்கி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளது. அதன்படி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகைச்சுவையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவே இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

Today Trending News in Tamil

இதில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. குறிப்பிட்ட சமூகம் மற்றும் தனி நபர்களின் உணர்வுகளை நாங்கள் புண்படுத்தியிருக்கலாம். எனவே இந்த வீடியோ நாங்கள் நீக்கிவிட்டோம் என விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் தேசிய பட்டியிலின ஆணையம் சொமோட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!