தீபாவளிக்கு முன் இந்தியாவின் முதல் நீர்மூழ்கி சுற்றுலா அறிமுகம்

தீபாவளிக்கு முன் இந்தியாவின் முதல் நீர்மூழ்கி சுற்றுலா அறிமுகம்
X
இந்தியாவின் முதல் நீர்மூழ்கி சுற்றுலா தீபாவளிக்கு முன்னர் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் நீர்மூழ்கி சுற்றுலாவை குஜராத் அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்து மதத்தில் புராண முக்கியத்துவம் வாய்ந்த துவாரகா நகரத்தின் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய தீவான பெட் துவாரகாவைச் சுற்றியுள்ள கடல்வாழ் உயிரினங்களை ஆராயும் திட்டத்தில் மஜ்கான் டாக் லிமிடெட் (எம்.டி.எல்) உடன் கைகோர்த்துள்ளது.

சமீபத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த திட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சுற்றுலா வசதி 2024 தீபாவளிக்கு முன்னர் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் மூழ்கி தீவைச் சுற்றியுள்ள கடல்வாழ் உயிரினங்களை பார்த்து அனுபவிக்க முடியும்.

புராண நூல்களின்படி, இந்த இடம் நீரில் மூழ்கிய நகரத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, இது பகவான் கிருஷ்ணரால் உருவாக்கப்பட்டது.

வரவிருக்கும் வைப்ரண்ட் குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வ திட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பல் சுமார் 35 டன் எடையும், 30 பயணிகளை ஏற்றிச்செல்லும் திறனும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில், 24 சுற்றுலாப் பயணிகள் ஜன்னல் இருக்கைகளுக்கு அருகில் இரண்டு வரிசைகளில் அமர வைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் உள்ளே இருந்து காட்சியை பார்க்கும் வசதியாக அனுபவிப்பார்கள்.

இதுகுறித்து குஜராத் சுற்றுலாவின் நிர்வாக இயக்குநர் சவுரப் பர்தி கூறுகையில், இது ஒரு "வித்தியாசமான திட்டம்" என்றும், இது நகரத்தில் சுற்றுலாவுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்றும் கூறினார்.

துவாரகையின் மத முக்கியத்துவம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். புகழ்பெற்ற துவாரகாதீஷ் கோயில் இந்துக்களின் முக்கிய யாத்திரைத் தலமாகும்.

Tags

Next Story
ai solutions for small business