தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 10ம் தேதி கடைசி

தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 10ம் தேதி கடைசி
X

பைல் படம்

தேசிய தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் விருதுகள்-2023-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாகவும், அவை மேலும் கூடுதலான உயர்நிலையை அடைவதற்கு ஊக்கப்படுத்தவும் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை வழங்குகிறது. இதன்படி, தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 வழங்குவதற்கு தொழில்துறை விருது, மாநில விருது, மாவட்ட விருது, வங்கி விருது, ஆகிய 4 பிரிவுகளில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய எம்எஸ்எம்இ விருது திட்டத்திற்கான செயல்பாட்டு விதிமுறைகளில் நகல் மற்றும் இணையதள விண்ணப்பங்கள் www.dcmsme.gov.in என்ற இணைய தளத்திலும், https://dashboard.msme.gov.in/na/Ent_NA_Admin/Ent_index.aspx. என்ற இணைப்பிலும் கிடைக்கும்.

இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 10.05.2023

கூடுதல் விவரங்களை அறிய சென்னை கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ துறையின் இணை இயக்குநரை தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்- 044-22501011/12/13/14, மின்னஞ்சல்-dcdi-Chennai@dcmsme.gov.in)

Tags

Next Story
ai based agriculture in india