லடாக்கில் பேருந்து விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் இரங்கல்

லடாக்கில் பேருந்து விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் இரங்கல்
X
லடாக் பேருந்து விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

லடாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டு டுவிட்டர் பதிவில் கூறியதாவது:

"லடாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நமது துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம். எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story