ஆஸ்கர் விருதுடன் பொற்கோவில் சென்ற குனீத் மோங்கா
பைல் படம்.
சிறந்த ஆவணப்படத்துகான ஆஸ்கர் விருதை பெற்றுள்ள குனீத் மோங்கா அமிர்தசரஸ் பொற்கோவிக்கு சென்று வழிபாடு செய்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
95-வது ஆஸ்கர் விருது விழாவில் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரிப்பில் கார்த்திகி கொன்சால்வ் இயக்கத்தில் வெளியான ‘ தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் சிறந்த ஆவணப்படத்துகான ஆஸ்கர் விருதை வென்றது. ஆவணப்பட வரிசையில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய ஆவணப்படம் என்ற சாதனையை தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் படைத்திருக்கிறது. இந்தப் படத்துக்கான ஆஸ்கர் விருதை தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் இயக்குனர் கார்த்திகி கொண்சால்வும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், குனீத் மோங்கா அமிர்தசரஸ் பொற்கோவில் சென்று வழிபாட்டை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை செலிபிரிட்டி செப் விகாஸ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விமான நிலையத்தில் குனீத் மோங்காவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு ஆஸ்கர் விருதை ஏந்திக்கொண்டு அமிர்தசரஸ் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்.
சமீபத்தில் ஆஸ்கர் விருது மேடையில் தனக்கு மேடையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று குனீத் மோங்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu