கே.எல்.ராகுலுக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த கோலி

கே.எல்.ராகுலுக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த கோலி
X

பைல் படம்.

கே.எல்.ராகுல்-அதிஷா ஷெட்டி தம்பதியருக்கு விலையுயர்ந்த பரிசுகளை எம்.எஸ்.தோனியும் விராட் கோலியும் வழங்கியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு சுனில் ஷெட்டியின் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவிக்கப்பட்ட பிறகு திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 23-ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் என 100 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய அணி வீரரான விராட் கோலி ஆகிய இருவரும் கே.எல்.ராகுலுக்கு அளித்துள்ள திருமண பரிசு தற்போது பேசுபொருளாகியுள்ளது. இருவரும் 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை கே.எல்.ராகுலுக்கு வழங்கியுள்ளனர்.

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி 80 லட்ச ரூபாய் மதிப்பிலான கவாஸ்கி நின்ஜா பைக்கை வழங்கியுள்ளார். விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஜோடி, சுமார் 2.70 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ளனர். எம்.எஸ்.தோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய போதுதான் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுக வீரராக கே.எல்.ராகுல் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!