வரலாற்று சாதனை படைக்கும் திருநங்கை.. அடுத்த மாதம் குழந்தை பிறப்பு

வரலாற்று சாதனை படைக்கும் திருநங்கை.. அடுத்த மாதம் குழந்தை பிறப்பு
X

திருநங்கை தம்பதிகள்.

கேரளா திருநங்கை கர்ப்பமாகி, மார்ச் மாதம் தங்கள் குழந்தையை பெற்றெடுக்க உள்ளதாக தம்பதிகள் அறிவித்துள்ளனர்.

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள திருநங்கைகளான ஜஹாத் மற்றும் ஜியா பவல் தம்பதிகள், பெற்றோரை தழுவுவதற்கு தயாராகி வருகின்றனர். அடுத்த மாதம் குழந்தை பிறப்பதற்கு எதிர்நோக்கியுள்ளதாக தம்பதியினர் அறிவித்துள்ளனர். இது நாட்டில் முதல்முறையாக ஒரு திருநங்கையின் கர்ப்பமாக கருதப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் திருநங்கை தம்பதியினர், மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். நடனக் கலைஞரான ஜியா பவல், இன்ஸ்டாகிராமில் தனது நண்பரான ஜஹாத் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த ஜோடி தற்போது மார்ச் மாதத்தில் தங்கள் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இது இந்தியாவில் உள்ள திருநங்கைகளில் முதன் முறையாக குழந்தை பெருபவர் ஆநவார். ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாகவும், ஜஹாத் பெண்ணாகவும் பிறந்து ஆணாகவும் மாறினர். அவர்கள் இருவரும் தங்கள் திருநங்கைகளின் அடையாளங்களை அறிந்த பிறகு, தங்கள் இளமை பருவத்தில் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறினர்.

திருநங்கையான பவல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நான் தாயாக வேண்டும் என்ற எனது கனவையும், தந்தையாக வேண்டும் என்ற அவரது கனவையும் நாங்கள் நனவாக்க உள்ளோம். எட்டு மாத கரு இப்போது (ஜஹாத்தின்) வயிற்றில் உள்ளது. நாங்கள் அறிந்ததிலிருந்து, இது இந்தியாவில் முதல் திருநங்கை ஆணின் கர்ப்பம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிறப்பாலும், உடலாலும் நான் பெண்ணாக இல்லாவிட்டாலும், குழந்தை என்னை 'அம்மா' என்று அழைப்பதைக் கேட்க வேண்டும் என்ற பெண்மையின் கனவு எனக்குள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்து மூன்று வருடங்கள் ஆகிறது. என் கனவு போல. அம்மா, அவர் (ஜஹாத்) தந்தையாக வேண்டும் என்று கனவு காண்கிறார். இன்று அவரது முழு சம்மதத்துடன் எட்டு மாத வாழ்க்கை அவரது வயிற்றில் நகர்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஒன்றாக வாழத் தொடங்கியபோது, ​​எங்கள் வாழ்க்கை மற்ற திருநங்கைகளிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். பெரும்பாலான திருநங்கைகள் சமூகம் மற்றும் அந்தந்த குடும்பத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். எங்களுக்குப் பிறகும் ஒரு நபர் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இந்த உலகில் நாட்கள் முடிந்துவிட்டன என்று ஜியா கூறியுள்ளார்.

இந்த திருநங்கை தம்பதியினர் முன்னதாக ஒரு குழந்தையை தத்தெடுக்க திட்டமிட்டதாகவும், ஆனால் அவர்கள் திருநங்கைகள் என்பதால் சட்ட நடவடிக்கைகள் அவர்களுக்கு சவாலாக இருந்தது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆதரவளித்த அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவர்களுக்கும் ஜவாத் பவல் நன்றி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு ஆணாக மாறுவதற்கான தனது பயணத்தைத் ஜஹாத் தொடர்வார் என கூறப்படுகிறது.

ஜஹாத் இரண்டு மார்பகங்களையும் அகற்றியதால், மருத்துவக் கல்லூரியில் உள்ள தாய்ப்பால் வங்கியில் இருந்து குழந்தைக்கு உணவளிக்க உள்ளதாக ஜியா பவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா