கர்நாடக போலீசாரை கைது செய்த கேரள போலீஸ்: ரூ.3.95 லட்சம் பறிமுதல்

கர்நாடக போலீசாரை கைது செய்த கேரள போலீஸ்: ரூ.3.95 லட்சம் பறிமுதல்
X

கர்நாடக போலீசாரின் வாகனம்.

Kerala Police arrests Karnataka Police - கர்நாடக காவல்துறை அதிகாரிகளை கைது செய்த கேரள போலீசார், அவர்களது வாகனத்தில் இருந்து ரூ.3.95 லட்சத்தை மீட்டனர்.

கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்ய, கொச்சி வந்த 4 கர்நாடக போலீசாரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு கர்நாடக போலீசார், மிரட்டி பணம் பறித்ததாக கேரளாவில் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கேரள காவல்துறை கூறுகையில், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி கர்நாடகாவில் நடந்த ஆன்லைன் கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு தொடர்பாக அகில் மற்றும் நிகில் ஆகிய இருவரை கைது செய்ய கர்நாடக காவல்துறை குழு கொச்சிக்கு சென்றது. இந்த மோசடி குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கர்நாடக காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க, ஒவ்வொருவரிடமும் 25 லட்சம் ரூபாய் கர்நாடக போலீசார் கேட்டதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரூ.1 லட்சமும், மற்றவர் ரூ.2.95 லட்சமும் கொடுத்ததாகவும், அவர்களில் ஒருவர் இது குறித்து தனது வருங்கால மனைவி உதவியுடன் கேரள போலீசில் புகாரளித்தார்.

இதனையடுத்து புகாரின் பேரில், கர்நாடக காவல்துறை அதிகாரிகளை கைது செய்த கேரள போலீசார், அவர்களது வாகனத்தில் இருந்து ரூ.3.95 லட்சத்தை மீட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!