கனமழையால் மூழ்கியது கேரளா: மீட்புப்பணிக்கு புறப்படும் கடற்படை

கனமழையால் மூழ்கியது கேரளா: மீட்புப்பணிக்கு புறப்படும் கடற்படை
X

ஹெலிகாப்டர்களை தயார்படுத்தும் தெற்கு கடற்படையினர். 

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க டைவிங் மற்றும் மீட்பு குழுக்களுடன் தெற்கு கடற்படை ஹெலிகாட்டருடன் தயாராகி வருகிறது.

கேரளாவின் 5 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தெற்கு கேரளாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேரை காணவில்லை. மாநில பேரிடர் மீட்புப்பைடயினர் அங்கு விரைந்துள்ளனர்.இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மாநில அரசுக்கு உதவ தலைமையக தெற்கு கடற்படை தயார் நிலையில் உள்ளது.

கொச்சி, கோட்டயம், கூட்டிக்கல் பகுதிகளில் கடலில் மூழ்கிய குடும்பங்களை விமானம் மூலம் மீட்க கொச்சியின் தெற்கு கடற்படையிடம் கேரள மாநில பேரிடர் மீட்பு ஆணையம் உதவி கோரியுள்ளது.

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கடற்படை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது. டைவிங் மற்றும் மீட்பு குழுக்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

வானிலை விமானச் செயல்பாடுகளுக்கு உகந்ததாக அமைந்தவுடன், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மக்களை மீட்க தயாராகி வருகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!