/* */

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி பங்கேற்று துவக்கம்

11 மாவட்டங்களை உள்ளடக்கிய கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து செவ்வாய்க்கிழமை கொச்சியில் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில்: பிரதமர்  மோடி பங்கேற்று துவக்கம்
X

வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி 

இரண்டு நாள் கேரளப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 11:10 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கொச்சி சென்ற அவர், நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோவை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் 1ல் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸைக் கொடியாசித்து துவக்குவதற்கு முன், ரயிலின் ஒரு பெட்டிக்குள் பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடினார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆகியோரும் பிரதமருடன் ரயிலுக்குள் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

"கேரளா மாநிலம் விழிப்புணர்வு மற்றும் படித்த மக்கள். இங்குள்ள மக்களின் கடின உழைப்பும் பணிவும் அவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்" என்று திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி கூறினார்.

இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களை உள்ளடக்கும்.

காலை கொச்சியில் இருந்து புறப்பட்ட பிரதமர் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பான, மலிவானபயணத்தை வழங்குவதுடன், சுற்றுலாவையும் மேம்படுத்தும் வகையில், கொச்சி நீர் மெட்ரோ திட்டம் ஒன்று. முதல் கட்டத்தில், நீர் மெட்ரோ இரண்டு வழித்தடங்களில் எட்டு மின்சார-கலப்பின படகுகளுடன் பயணம் செய்யத் தொடங்கும்; உயர்நீதிமன்றம் முதல் வைப்பின் வரையும், வைட்டிலா முதல் காக்கநாடு வரையிலும் இயக்கப்படும். . உயர்நீதிமன்றத்தில் இருந்து வைபின் வழித்தடத்தில் ஒற்றை பயண டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வைட்டிலாவிலிருந்து காக்கநாடு வழித்தடத்திற்கு ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 April 2023 5:33 AM GMT

Related News