brain-eating amoeba நீரில் வாழும் அமீபாவால் அபூர்வ மூளை தொற்று நோய்: கேரள சிறுவன் உயிரிழப்பு

brain-eating amoeba நீரில் வாழும் அமீபாவால் அபூர்வ மூளை தொற்று நோய்: கேரள சிறுவன் உயிரிழப்பு
X
நெக்லேரியா ஃபௌலேரி அமீபாவால் ஏற்படும் அரிதான மற்றும் கொடிய மூளைத் தொற்று ஆகும். இந்த அமீபா பொதுவாக "மூளை உண்ணும் அமீபா" என்று அழைக்கப்படுகிறது,

கேரள மாநிலம் ஆலப்புழா பானாவள்ளி பகுதியை சேர்ந்த அனில்குமார்-சாலினி தம்பதியின் மகன் குருதத்(வயது15). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

மாணவன் குருதத் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் சிலருடன் அங்குள்ள குளத்தில் குளிக்கச்சென்றான். குளத்தில் குளித்து விட்டு வந்த பிறகு அவனுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகும் அவனுக்கு உடல் நிலை சரியாகவில்லை.

மேலும் கடந்த சில நாட்களாக சம்பந்தம் இல்லாமல் பேச தொடங்கினான். அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் ஆலப்புழா அரசு மருத்துவமனையில் பெற்றோர் மூலம் சேர்க்கப்பட்டான். அங்கு பரிசோதனை நடத்தியதில் மாணவன் குருதத், அமீபா தாக்குதல் காரணமாக பரவும் 'அபூர்வ நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சிறுவன் குருதத் அங்கேயே சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அபூர்வ நோய்க்கு சிறுவன் பலியாகி உள்ள சம்பவம் கேரள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெக்லேரியா ஃபௌலேரி அமீபாவால் ஏற்படும் அரிதான மற்றும் கொடிய மூளைத் தொற்று ஆகும். இந்த அமீபா பொதுவாக "மூளை உண்ணும் அமீபா" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளைக்குச் சென்று மூளை திசுக்களின் வீக்கத்தையும் அழிவையும் ஏற்படுத்தும்.

ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகள் போன்ற சூடான நன்னீர் உடல்களில் மக்கள் நீந்தும்போது அல்லது மூழ்கும்போது PAM பொதுவாக பரவுகிறது. நீச்சல் அல்லது டைவிங் செய்யும் போது மூக்கின் மேல் தண்ணீர் வலுக்கட்டாயமாக வரும்போது அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும்.

அறிகுறிகள் பொதுவாக அமீபாவை வெளிப்படுத்திய 1 முதல் 7 நாட்களுக்குள் தொடங்கும். முதல் அறிகுறிகள் பெரும்பாலும் தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி மற்றும் கடினமான கழுத்து போன்ற பாக்டீரியா மூளைக்காய்ச்சலைப் போலவே இருக்கும். நோய்த்தொற்று அதிகரிக்கும்போது முன்னேறும்போது, ​​ குழப்பம், வலிப்புத்தாக்கங்கள், மாயத்தோற்றம் மற்றும் கோமாவை அனுபவிக்கலாம்.

அறியப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்க உதவும் சிகிச்சைகள் உள்ளன. மிகவும் பயனுள்ள சிகிச்சையானது ஆம்போடெரிசின் பி மற்றும் மைக்கோனசோல் மருந்துகளின் கலவையாகும். இந்த மருந்துகள் நரம்பு வழியாக கொடுக்கப்பட வேண்டும், மேலும் அவை கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- சிறுவன் குருதத் இறப்பதற்கு அபூர்வ 'பிரைமரி அமீபிக் மெனிஞ்சோயென்சி பாலிட்டிஸ்' நோய் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நோய் பாதிக்கிறது. இந்த நோய் தாக்கினால் 100 சதவீதம் மரணம் உறுதியாகும். இந்த நோய் தாக்கி கேரளாவில் இதுவரை 5 பேர் மரணம் அடைந்து உள்ளனர். 2016-ம் ஆண்டில் ஆலப்புழாவில் ஒருவரும், 2019 மற்றும் 2020-ல் மலப்புரம் மாவட்டத்தில் 2 பேரும், 2020-ல் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவரும், 2022-ல் திருச்சூர் மாவட்டத்தில் ஒருவரும் இந்த நோயிக்கு பலியாகி உள்ளனர். இந்த நோய் தாக்குதலுக்கு ஓடாமல் தேங்கி கிடக்கும் தண்ணீரில் உள்ள அமீபா தான் காரணம். தேங்கி கிடக்கும் அது போன்ற தண்ணீரில் குளித்தாலோ அல்லது முகம் கழுவினாலோ மூக்கு வழியாக உடலுக்குள் அமீபா புகுந்து மூளையை தாக்கும். இந்த அமீபாவை 'பிரைன் ஈட்டர்' என்று தான் அழைக்கப்படுகிறது. எனவே தேங்கி கிடக்கும் மற்றும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதையும், முகம் கழுவுவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!