தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடகா திட்டவட்டம்
காவிரி ஆறு - கோப்புப்படம்
நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழகத்தின் பிலிகுண்டுலுவை வந்தடையும் வகையில் குறைந்தபட்சம் 2,600 கன அடி தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அடுத்த 15 நாட்களுக்கு 13,000 கனஅடி (16.90 ஆயிரம் மில்லியன் கனஅடி) திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. பிலிகுண்டுலுவில் நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15-ஆம் தேதி வரை 2,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று கர்நாடகா தனது நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று CWRC இறுதியாக பரிந்துரைத்தது.
89வது காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (சிடபிள்யூஆர்சி) கூட்டத்தில், கர்நாடகா தனது நான்கு நீர்த்தேக்கங்களிலும் நீர் வரத்து இல்லாத நிலையில், பிலிகுண்டுலுவை அடையும் வகையில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா தெரிவித்தது
காவிரிப் படுகையில் போதிய தண்ணீர் இல்லை என்று கூறிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர் ஒழுங்காற்றும் குழு உத்தரவின்படி அண்டை மாநிலமான தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றும் குழு (CWRC) கர்நாடகாவுக்கு திங்கள்கிழமை பரிந்துரைத்ததை அடுத்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர் வரத்து அண்டை மாநிலத்திற்கு தண்ணீர் திறக்க போதுமானதாக இல்லை. காவிரி படுகையில் சுமார் 51 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறினார்.
"கேஆர்எஸ் அணையில் நீர்வரத்து பூஜ்ஜியமாக உள்ளது. தண்ணீரை திறக்கும் சக்தி எங்களிடம் இல்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 815 கன அடி தண்ணீர் இயற்கையாகவே செல்கிறது. தமிழகம் தினமும் 13,000 கன அடி தண்ணீர் தேவைப்படுகிறது.
செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 15 வரை காவிரியில் 5,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு CWRC செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu