கர்நாடக பா.ஜ.க.வில் மறுசீரமைப்பு: புதிய நிர்வாகிகள் நியமனம்
பைல் படம்
கர்நாடகாவில் 10 துணைத் தலைவர்கள் உள்ளிட்ட மாநில அளவிலான நிர்வாகிகளை மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா நியமித்துள்ளார்.
ஷிகாரிபுரா எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதுகுறித்து கட்சி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, முன்னாள் அமைச்சர்கள் முருகேஷ் நிரானி, பி.ஏ.பசவராஜ் (பைரதி), ஹரதாலு ஹாலப்பா, நரசிம்ம நாயக் (ராஜு கவுடா), எம்.எல்.ஏ அனில் பெனகே, என்.மகேஷ், ரூபாலி சந்தோஷ் நாயக், டாக்டர் பசவராஜ் கெலாகர், மாளவிகா அவினாஷ் மற்றும் எம்.ராஜேந்திரா ஆகியோர் புதிய துணைத் தலைவர்களாக உள்ளனர்.
மாநில பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் வி.சுனில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ராஜீவ், என்.எஸ்.நந்தீஷ் ரெட்டி, ஜே.சைலேந்திர பெல்டாலே, டி.எஸ்.அருண், பசவராஜ் மட்டிமோட், சி.முனிராஜு, வினய் பிதாரே, கேப்டன் பிரிஜேஷ் சவுதா, டாக்டர் சரண் தலிகேரி, லலிதா அனபூர், டாக்டர் லட்சுமி அஸ்வின் கவுடா மற்றும் அம்பிகா ஹுலினேகர் ஆகியோரை கட்சி செயலாளர்களாக கட்சி நியமித்துள்ளது.
மாநில பாஜக பொருளாளராக சுப்பனரசிம்ஹா, மகிளா மோர்ச்சா தலைவராக சி.மஞ்சுளா, யுவ மோர்ச்சா தலைவராக தீரஜ் முனிராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu